ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பழுதான சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

சீர்காழி அருகே கடந்த 4 ஆண்டுகளாகப் பழுதடைந்த சாலையைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :29 மார்ச் 2018, 4:05 am

சீர்காழி அருகே கடந்த 4 ஆண்டுகளாகப் பழுதடைந்த சாலையைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகேயுள்ள மாதிரவேளூர் கிராமத்திலிருந்து பாலுரான்படுகை, பட்டியமேடு, உச்சிமேடு, பனங்காட்டாங்குடி மற்றும் வடரெங்கத்துக்குச் செல்லும் சாலை 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், சுற்றுவட்டாரத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தடுமாறிக் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இந்த தார்ச் சாலை மேம்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதைச் சீரமைக்குமாறு பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் காமராஜ் வலியுறுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.