மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜேசிஐ சங்க விழா: சமூக சேவையாற்றியோருக்கு விருது

ஜேசிஐ பவர் மன்னார்குடி அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜேசிஐ சங்க ஆண்டு விழா மண்டல மாநாட்டில், சமூக சேவையாற்றிய இயக்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2018, 11:58 pm

DIN

ஜேசிஐ பவர் மன்னார்குடி அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜேசிஐ சங்க ஆண்டு விழா மண்டல மாநாட்டில், சமூக சேவையாற்றிய இயக்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மன்னார்குடி ருக்மணிபாளையம் நடுத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் மண்டல துணைத் தலைவர் கவிதா செந்தில் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் கே. வெங்கடேஷ் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களை ஜேசிஐ பவர் மன்னார்குடி கிளைத் தலைவர் கே.கண்ணன் அறிமுகம் செய்து வைத்தார். ஜேசிஐ இயக்கத்தின் நோக்கமும் மற்றும் சமுதாய வளர்ச்சியில் அதன் பங்கும் என்ற தலைப்பில், அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவர் நா. முத்துசாமி, சமுதாய மேம்பாடு என்ற தலைப்பில் பூ உலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் வீ. சுந்தர்ராஜன், சமூக ஆர்வலர் ஆலங்குடி ஆர். வெள்ளைச்சாமி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் சிறந்த சமூக சேவையாற்றிய கிளை இயக்கங்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில், ஜேசிஐ முன்னாள் தேசியத் தலைவர் ஜி. சிவக்குமார், முன்னாள் தேசிய சட்ட ஆலோசகர் ஜி. வெங்கடேசன், முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் சா. சம்பத், மண்டலச் செயலர் சா. அகிலன், மண்டல இயக்குநர் வீ. காந்தி லெனின், மாநாட்டு இயக்குநர் பி.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.