வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகிறார் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் துரைவேலன் கூறினார்.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் கொரடாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாவட்டத் தலைவர் துரைவேலன் கூறியது:
வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகிறார். அக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம்தாழ்த்தும் மத்திய அரசைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் முறையைக் கண்டித்தும் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது தவிர தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வீரமணி, திருவாரூர் நகரத் தலைவர் மடப்புரம் எம். சம்பத், விவசாயிகள் பிரிவு தலைவர் இளங்கோவன், மீனவர் அணி தலைவர் நிஜாம்மைதீன், எஸ்சி., எஸ்.டி., பிரிவு தலைவர் கதிர்வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

ஒட்டன்சத்திரம் - தொடா் சாதனை படைப்பாரா அர.சக்கரபாணி?
மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

