மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கல்வி செயல் திறன் பட்டியலில் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி சிறப்பிடம்

அண்ணா பல்கலைக்கழக கல்வி செயல் திறன் பட்டியலில், நாகை, பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி சிறப்பிடம் பெற்றுள்ளது.

Updated On :21 மே 2018, 8:05 pm

அண்ணா பல்கலைக்கழக கல்வி செயல் திறன் பட்டியலில், நாகை, பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி சிறப்பிடம் பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட 506 கல்லூரிகளுக்கான கல்வி செயல் திறன் பட்டியலில், பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி 43-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்ட பொறியியல் கல்லூரிகள் அளவில் இக்கல்லூரி மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதையொட்டி, சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. ஆனந்த், கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்களுக்குத் தங்க நாணயம் மற்றும் சுழற்கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும், அனைத்துத் துறைகளிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு அவர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் ஜி. கிப்ட்சன் சாமுவேல், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெ. சுதாகர், கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆர். முருகதாஸ், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மு. மணிகண்டபிரசாத், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். நிறைமதி, நிர்வாக அலுவலர் மு. குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.