6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :21 மே 2018, 8:04 pm

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சந்தைப்பேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள இந்திராகாந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஆர். கனகவேல் தலைமை வகித்தார்.
ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜகோபால் மாலை அணிவித்தார். இதைத்தொடர்ந்து, வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியை கட்சியினர் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெடுவை குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் வடுகநாதன், மாவட்டச் செயலாளர்கள் டி. பாலசுப்ரமணியன், சங்கு கோபால், தொழிற்சங்கத் தலைவர் வி. பஞ்சன், நகர துணைத் தலைவர் சுகுமார், நகரச் செயலர் ராஜ்மோகன், மாவட்ட கமிட்டி உறுப்பினர் பாரத் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.