6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

வங்கிகளில் பணத்தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வர்த்தகர் சங்கம் கோரிக்கை

வேதாரண்யத்தில் உள்ள பெரும்பாலான வங்கிக் கிளைகளில் தொடர்ந்து நிலவும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :21 மே 2018, 8:08 pm

வேதாரண்யத்தில் உள்ள பெரும்பாலான வங்கிக் கிளைகளில் தொடர்ந்து நிலவும் பணத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி தலைமை அலுவலக அதிகாரிகள், இந்தியன் வங்கி மண்டல மேலாளர், வங்கிக் கிளை மேலாளர்களுக்கு வேதாரண்யம் வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
வேதாரண்யத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிக் கிளைகளில் வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் கணக்கு தொடங்கி பண பரிவர்த்தனை செய்கின்றனர்.
இந்த வங்கிக் கிளைகளில் கடந்த சில மாதங்களாகப் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், ஏடிஎம் மையங்களிலும் இதே நிலை தொடர்வதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இந்நிலை தொடருமானால், வர்த்தகர் சங்கம் சார்பில் வங்கிக் கிளைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.