“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வேதாரண்யம் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட 61 கிராமங்களுக்கு நிகழாண்டுக்கான வருவாய்த் தீர்வாயப் பணிகள்(ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

Updated On :21 மே 2018, 7:50 pm

வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட 61 கிராமங்களுக்கு நிகழாண்டுக்கான வருவாய்த் தீர்வாயப் பணிகள்(ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கும் இப்பணி ஜூன் 6-ஆம் தேதி வரை நடைபெறும். முதல் நாளான செவ்வாய்க்கிழமை காடந்தேத்தி, பிரிஞ்சிமூலை, திருமாளம், தலைஞாயிறு அக்ரஹாரம், ஒன்றாம் மற்றும் இரண்டாம் சேத்தி கிராமங்களின் கணக்குகள் ஆய்வுக்குள்படுத்தப்படும்.
தொடர்ந்து, புதன்கிழமை (மே 23) கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, கள்ளிமேடு, தலைஞாயிறு 4,3,5-ஆம் சேத்திகள் ஆகிய கிராமங்களின் கணக்குகளும், 24-ஆம் தேதி துளசாபுரம், உம்பளச்சேரி, மகாராஜபுரம் மேற்கு, கிழக்கு, அண்டகத்துறை, வேதாரண்யபுரம், பிராந்தியங்கரை கிராமங்களின் கணக்குகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
மே 25-ஆம் தேதி மூலக்கரை, வடமழை, செட்டிப்புலம், நாகக்குடையான், கத்தரிப்புலம், செண்பகராயநல்லூர், மருதூர் வடக்கு கிராமங்கள். 29- ஆம் தேதி தகட்டூர், பெத்தாச்சிக்காடு, சுப்பிரமணியன்காடு, தாணிக்கோட்டகம், வண்டுவாஞ்சேரி, வாய்மேடு மேற்கு, கிழக்கு, தென்னடார், பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமங்கள்.
30-ஆம் தேதி மருதூர் தெற்கு, ஆயக்காரன்புலம்-1,2,3,4, பஞ்சநதிக்குளம் கிழக்கு, நடுச்சேத்தி, பன்னாள் கிராமங்கள். 31-ஆம் தேதி புஷ்பவனம், குரவப்புலம், தேத்தாக்குடி வடக்கு, செம்போடை, ஆதனூர், கடிநெல்வயல், கருப்பம்புலம் ஆகிய கிராமங்களின் கணக்குகள் ஆய்வுக்குள்படுத்தப்படும்.
ஜூன் 1-ஆம் தேதி நெய்விளக்கு, தேத்தாக்குடி தெற்கு, பெரியகுத்தகை, தோப்புத்துறை, மகாராஜபுரம் கீழ்பாதி, வேதாரண்யம், பாகம், அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கோடியக்கரை கிராமங்களின் கணக்குகள் ஆய்வுக்குள்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.