நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்குள்பட்ட பழுதடைந்த பெரம்பூர் காவல் நிலையத்தை அகற்றிவிட்டு, புதிய காவல் நிலையம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பூர் காவல் நிலைய வரம்பெல்லைக்குள் திருவிளையாட்டம், கொத்தங்குடி, நல்லடை, சேத்தூர், வழுவூர், மங்கநல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
இந்த காவல் நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் நிலையத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு, காரைகள் பெயர்ந்து விழுகின்றன.
அத்துடன், மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே கசிவதால் காவலர்களும், புகார் அளிக்க வரும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இதன் காரணமாக காவலர்கள் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தற்காலிமாக காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான இடவசதி கிடையாது. ஆகையால், பழைய காவல் நிலையக் கட்டடத்தை இடித்துத் தள்ளிவிட்டு, புதிய கட்டடம் கட்ட சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பதியில் பொன்னக்கால்வாய் உற்சவம்!
ஆசாத் மாா்க்கெட் கொள்ளை வழக்கில் தில்லி காவலா் கைது

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

மக்களுக்கு இலவசமாக ஓஆர்எஸ் பவுடர் வழங்க ஆளுநரிடம் கோரிக்கை!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

