அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஸ்டாலின் கைதைக் கண்டித்து 13 இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல் போராட்டங்களும், 2 இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் வியாழக்கிழமை

Updated On :25 மே 2018, 1:16 am IST

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல் போராட்டங்களும், 2 இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் வியாழக்கிழமை நடைபெற்றன.
சந்திப்புக்கு அனுமதி மறுத்த தமிழக முதல்வரைக் கண்டித்து சட்டப் பேரவை முன்பாக தர்னாவில் ஈடுபட்டது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
நாகப்பட்டினம்: நாகை பொது அலுவலக சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெüதமன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கீழ்வேளூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான உ. மதிவாணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். மறியலில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி ஆர்ச் அருகே நடைபெற்ற மறியலுக்குக் கீழையூர் ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். ஒன்றிய, பேரூர் திமுக கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மறியலில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கங்களாஞ்சேரி: திருமருகல் அருகே உள்ள கங்களாஞ்சேரியில் நடைபெற்ற மறியலுக்கு திமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். திமுக மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மறியலில் பங்கேற்ற 40-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை: மு.க. ஸ்டாலின் கைது சம்பவத்தைக் கண்டித்து, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக, திமுக நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா எம். முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 35 பேரை, மயிலாடுதுறை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
சீர்காழி: சீர்காழி, கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் நடைபெற்ற சாலை மறியலுக்கு திமுக நகரச் செயலாளர் சுப்புராமன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ஏ.பி.எஸ். குமார், இளைஞரணி நகர அமைப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம்: வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் 5 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. வேதாரண்யம் ராஜாஜி பூங்கா பெரியார் சிலை அருகே நடைபெற்ற சாலை மறியலுக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்.வி. காமராஜ் தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் மா.மீ. புகழேந்தி உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாய்மேடு கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் எல்.எஸ்.இ. பழனியப்பன் தலைமை வகித்தார். மறியலில் பங்கேற்ற 40 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயக்காரன்புலம் கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு திமுக விவசாயத் தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர். துரைராஜ் தலைமை வகித்தார். நிர்வாகி டி.எஸ்.பாலு உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
மருதூர் தெற்கு கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு திமுக நிர்வாகி உதயம். முருகையன் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். கரியாப்பட்டினம் கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு திமுக ஒன்றிய நிர்வாகி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மறியலில் பங்கேற்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 13 இடங்களில் திமுக சார்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 700-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்: நாகை மாவட்டம், குத்தாலம் உள்பட மாவட்டத்தில் 2 இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குத்தாலம், கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தேர்தல் பணிக் குழு செயலாளர் பி. கல்யாணம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் முருகைய்யா, நகரச் செயலாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.