சீர்காழி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, கொள்ளிடம், பழையார் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மழை விட்டுவிட்டு பெய்தது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குறிப்பாக சீர்காழி, செம்மங்குடி, கொண்டல், மங்கைமடம், காரைமேடு, திருவாலி, திருநகரி, காத்திருப்பு, செம்பதனிருப்பு, எடக்குடி வடபாதி, அகணி, வள்ளுவக்குடி, மாதானம், கற்கோவில், மானாந்திருவாசல், வேட்டங்குடி, ஆரப்பள்ளம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடிவிதைப்பு மற்றும் தாளடிநடவு என 25 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சீர்காழி நகரில் சாக்கடை வடிகால்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால், மழைநீருடன், சாக்கடை நீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்தது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான வேன்: கொள்ளிடத்திலிருந்து சீர்காழி வந்துகொண்டிருந்த வேன், தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் மழையால் சாலையோரம் இறங்கியது. அதிருஷ்டவசமாக அதில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்

6 ரன்கள் தேவையானபோது 6 யார்க்கர் பந்துகளை வீசிய இளம் பாகிஸ்தான் வீரர்..! யார் இந்த ஹுனைன் ஷா?

உங்களுக்கும் வரலாம் பேரிடர் எச்சரிக்கை ஒலி! பதற்றப்பட வேண்டாம்!!

செஞ்சிக் கோட்டையில் தூய்மை பணி: மகராஷ்டிரத்தில் இருந்து 250 போ் வருகை!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

