நாகை மாவட்டம் மயிலாடுதுறை நுகர்வோர் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
மயிலாடுதுறை நாராயணப்பிள்ளை தெருவில் இயங்கிவரும்,நுகர்வோர் மொத்த கூட்டுறவு பண்டக சாலையில்,ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை நிலையம் திறக்கப்பட்டு, குறைந்த விலையில் பட்டாசு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. நிகழாண்டுக்கான தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை நிலையத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் விஜிகே.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,தொகுதி எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பட்டாசு விற்பனை நிலையத்தைத் திறந்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பண்டகசாலை கண்காணிப்பாளர் மரியஅந்துவம், முன்னாள் தலைவர் எஸ்.அலி, துணைத் தலைவர் அருணாச்சலம், இயக்குநர் செல்வசேகரன் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையில் நாளை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா் அழகா்

இலங்கை- செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு: நீதிமன்ற உத்தரவில் மீண்டும் தொடக்கம்

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு - வாக்குக் கணிப்பில் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

