நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், சி.டி. ஸ்கேன் மையத்தைத் திறந்து வைத்துப் பேசியது:
மகப்பேறு சிகிச்சையில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை தமிழகத்தில் 5-ஆவது இடத்தில் உள்ளது. சிறுநீரக கோளாறு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க இங்கு 3 டயாலிசிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், வைரஸ் தாக்குதல் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க மேலும் ஒரு டயாலிசிஸ் கருவிப் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள சி.டி. ஸ்கேன் மையத்தை இப்பகுதி மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மயிலாடுதுறையில் ரூ. 38.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட, தமிழக அரசு அரசாணை வழங்கியுள்ளது. புறவழிச்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்து வரும் தன்னார்வலர்கள்,சேவை சங்கத்தினர்கள், வணிகர் சங்கத்தினர்களுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வீ. ராதாகிருஷ்ணன், பி.வி.பாரதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் குருநாதன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் கோ. தேன்மொழி, வட்டாட்சியர் து.விஜயராகவன், மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் விஜிகே.செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம். சக்தி, ஏசிஎன்.விஜயபாலன், என். ரெங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசு பெரியார் மருத்துவமனை குடிமை மருத்துவ அலுவலர்ஆர்.ராஜசேகரன் வரவேற்றார். முதுநிலை உதவி மருத்துவர் வி. வீரசோழன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

தேவி பத்ரகாளியம்மன் கோயில் மிருகசிரீஷ நட்சத்திர திருவிழா

தாளவாடி மலைக் கிராமங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

