புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வெளிமாநில மது கடத்திய 35 பேர் கைது

நாகை மாவட்டத்தில் மது கடத்தியதாக, 35 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:15 am

நாகை மாவட்டத்தில் மது கடத்தியதாக, 35 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு நாகை மாவட்டம் வழியாக மது கடத்துவது அதிகரித்து வருவதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் கவனத்துக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் அந்தந்தப் பகுதி போலீஸார் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், சந்தேகத்துக்கு இடமான வகையில் பதிலளித்தவர்களை சோதனை செய்ததில், அவர்கள் காரைக்கால் பகுதியிலிருந்து மது கடத்தி வந்தது தெரிய வந்தது.  இதுதொடர்பாக, நாகை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 35 பேர்  கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடமிருந்து 3,830 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், மதுப்புட்டிகள்,  5  இருசக்கர வாகனங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.