நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் சுனாமி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். இதையொட்டி, ஆண்டுதோறும் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதன்கிழமை தரங்கம்பாடியில் நிகழ்ந்த சுனாமி எச்சரிக்கை ஒத்திகையின்போது, ஒலி பெருக்கி மூலம் சுனாமி வரபோகிறது என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது, பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட காவல் துறையினர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவ மக்களை பேருந்து மற்றும் வாகனங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். தவிர, ஆடு, மாடுகளும் மீட்கப்பட்டன. அடுத்து, கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சுனாமி பேரலையில் சிக்கினர். இவர்களை தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீஸார் தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பு முகாமுக்கு கொண்டு சென்று அங்கு மருத்துவ குழுவினர் முதலுதவி செய்தனர். மேலும் இறந்து போனவர்களை உறவினர்கள் கட்டிப்பிடித்து அழுத காட்சிகள் தத்ரூபமாக இருந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழி, மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், பொறையார் காவல்துறை ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கணவா் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தற்கொலை

ராணிப்பேட்டையில் காவல்துறை கழிவு வாகனங்கள் ஏலத்தில் ரூ. 4.5 லட்சம் வருவாய்

தோ்வு ரத்து முடிவு எதிரொலி: ஜாா்க்கண்டில் அரசு ஊழியா்கள் 2-வது நாளாக போராட்டம்

உத்தரகண்ட்: பலத்த மழையில் சிக்கிய 8 போ் மீட்பு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


