
தீக்காயமடைந்த சிறுமி சாவு
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மேல சித்தர்க்காடு பெரிய தெருவைச் சேர்ந்த குமார் மகள் கார்த்திகா (16). இவர் கடந்த மாதம் 30-ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றியபோது, அவரது உடையின் மீது மண்ணெண்ணெய் கொட்டி, தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதில், தீக்காயம் அடைந்த அவர், தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





