
நாங்கூர் பாலத்தில் பள்ளம்: சீரமைக்கக் கோரிக்கை
நாகை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள நாங்கூர் பகுதியில், பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள நாங்கூர் பகுதியில், பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழசட்டநாதபுரம்- அண்ணன்கோயில் நெடுஞ்சாலையில் நாங்கூர் திருமேனிக்கூடம் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்க்காலில் புதிய பாலம் அமைக்கபட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், பாலத்தை இணைக்கும் பொருட்டு, தார்ச்சாலையும் அமைக்கப்பட்டது. அப்போது, பாலத்தின் இணைப்புப் பகுதியில் சரியான முறையில் தார்க்கலவை பயன்படுத்தப்படவில்லை என தெரிகிறது.
இதனால், தற்போது பாலத்தின் இருபக்கங்களிலும் பள்ளமாகக் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், தூக்கி வீசப்பட்டு விபத்தில் சிக்குகின்றனர். எனவே, அசம்பாவிதச் சம்பவம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் இதை சரிசெய்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





