மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தின விழா

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மல்லியம் பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மல்லியம் பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரியின் நிர்வாக அலுவலர் வி. ராமன் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) து. குமார் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்கத்தின் தலைவர் சி.கே. பாலாஜி பங்கேற்றுப் பேசினார். கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். மாணவி கோமதி நன்றி கூறினார்.
சீர்காழி...
சீர்காழி பால்சாமி நாடார் அறக்கட்டளையின் வாணிவிலாஸ் உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை ஆசிரியர் தின விழா நடைபெற்றது. 
டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, அதன் தலைவர் சுப்பு. சொர்ணபால் தலைமை வகித்தார்.
 விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியை ஹேமலதா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சால்வை அணிவித்து சங்க நிர்வாகிகள் கௌரவித்தனர்.
இதில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மோகனசுந்தரம், துரை, அபாஸ்அலி, வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குத்தாலம்...
 குத்தாலம் அருகேயுள்ள திருமணஞ்சேரி அரசுப் பள்ளியில் புதன்கிழமை ஆசிரியர் தின விழா நடைபெற்றது.  
பள்ளித் தலைமையாசிரியர் மா. சத்தியவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில்,  அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தெழிலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். 
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
இதில், திருமணஞ்சேரி ஊராட்சி முன்னாள் தலைவர் இளையபெருமாள், பட்டதாரி ஆசிரியர் நவநீதகிருஷ்ணன், ஆசிரியை மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.