பேராலய ஆண்டு பெருவிழா: நாகை மாவட்டத்துக்கு செப். 8 -இல் உள்ளூர் விடுமுறை
வேளாங்கண்ணி பேரலாய ஆண்டு பெருவிழாவையொட்டி, சனிக்கிழமை (செப். 8) நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வேளாங்கண்ணி பேரலாய ஆண்டு பெருவிழாவையொட்டி, சனிக்கிழமை (செப். 8) நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா அலங்காரத் தேர் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. மாதா பிறந்த நாள் சனிக்கிழமை (செப். 8) காலை நடைபெறுகிறது. இதையொட்டி, நாகை மாவட்டத்துக்கு செப். 8 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு மட்டும் இந்த விடுமுறை, அக். 13 -ஆம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






