தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

சீர்காழியில் விநாயகர் சிலை விற்பனை தீவிரம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாகை மாவட்டம், சீர்காழியில் விநாயகர் சிலை விற்பனை புதன்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

Published On :

விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாகை மாவட்டம், சீர்காழியில் விநாயகர் சிலை விற்பனை புதன்கிழமை மும்முரமாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை (செப். 13) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை செய்து, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். 
வீடுகளில் வைத்து பூஜைகள் செய்வதற்கு ஏற்ற வகையில், சீர்காழியில் காமராஜர் வீதி, பிடாரி வடக்கு வீதி, கடைவீதி, தென்பாதி, பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
களிமண்ணால் செய்யப்பட்ட சிறியது முதல் பெரிய அளவிலான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல வண்ணங்கள் பூசி உருவாக்கப்பட்ட இந்த சிலைகள், ரூ.70 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், விநாயகர் சிலைகளுக்கான குடைகள் ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டன. அத்துடன் பூஜைக்கு தேவையான விளாம்பழம், நாவல் பழம், மலர்கள், அருகம்புல், வாழைப்பழம் போன்ற பொருள்களின் விற்பனையும் சிறப்பாக நடைபெற்றன. இதனால், சீர்காழி கடை வீதி கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.