மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

ஓம்சக்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருமணஞ்சேரி காளிவாய்க்கால் தெருவில் உள்ள ஓம்சக்தி விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Published On :

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருமணஞ்சேரி காளிவாய்க்கால் தெருவில் உள்ள ஓம்சக்தி விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை விநாயகர் அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் உத்ஸவம் தொடங்கி, முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. புதன்கிழமை இரண்டாம் கால யாக சாலை பூஜையில் பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டு, கடம் புறப்பட்டது. சிவாச்சாரியார்கள் கடங்களைச் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர்.
வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க குடமுழுக்கு நடைபெற்றது. உமாபதி சிவாச்சாரியார் உள்ளிட்டோர் சர்வ சாதகம் செய்து வைத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை காளிவாய்க்கால் தெரு கிராம நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.