இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சிறு விற்பனையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் புறக் காவல் நிலையம் அமைக்கக் கோரி சிறு விற்பனையாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 6:57 am IST

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் புறக் காவல் நிலையம் அமைக்கக் கோரி சிறு விற்பனையாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் ஏற்கெனவே இருந்ததுபோல் கயிறு பதித்து தரப்படாததைக் கண்டித்தும், வெண்டிங் கமிட்டி கூட்டப்படாததைக் கண்டித்தும் கோஷமிடப்பட்டன. மேலும், புதிய பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக புறக்காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை சிறு விற்பனையாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி. துரைக்கண்ணு தலைமை வகித்தார். நகராட்சி வெண்டிங் கமிட்டி உறுப்பினர்கள் ஆர். வெங்கடாசலம், எஸ். ஜோதி, பி. ஷேக் அலாவுதீன், ஆல்பர்ட் கெய்சிங், ஆர். ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான நாகை மாலி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி. கணேசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், ஜாக் அமைப்பின் செயலாளர் டி. இராயர் மற்றும் கார்,வேன், ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் எம். கருணாநிதி, சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவர் என். ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.