நாகூரில் ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகை அருகேயுள்ள நாகூர் காதர்ஷா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது உசேன் (40). இவர், சென்னையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த முஹம்மது உசேன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை, தனது ஜவுளிக் கடையில் வேலை செய்து வரும் நாகூர் ரெட்டைகம்மாளத் தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (20) என்பவரிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையில், நாகூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தாக், ரஹீம் மேலும் 2 பேர் பிரவீன் குமாரிடம், இருசக்கர வாகனத்தைக் கேட்டு தகராறு செய்தனராம். இதுகுறித்து, பிரவீன்குமார் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவருக்கு ஆதரவாக முஹம்மது உசேன் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை நாகூர் பகுதியில், காரில் சென்றுக்கொண்டிருந்த முஹம்மதுஉசேனை வழிமறித்த ஒரு கும்பல், அரிவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கார் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, முஹம்மது உசேன் நாகூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் முஸ்தாக், ரஹீம், பிலால், தாரிக் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1,000 கோடி இழப்பு! - மத்திய அரசு

சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு!

முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை!

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
