நாகையை அடுத்துள்ள மேல நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றம் மற்றும் சந்தனம் பூசும் விழா ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நாகூரில் அடக்கமாகி அருளும் பாதுஷா நாயகத்தின் மருமகள் ஹலரத் செய்யிதா சுல்தான் பீவி அம்மா சாகிபுவின் பெற்றோரான ஹலரத் செய்யது க்வாஜா மஹ்தூம், ஹலரத் செய்யிதா பீவி பாத்திமா மற்றும் உடன்பிறந்தவர்கள் அடக்கமாகியுள்ள தலமாக விளங்குகிறது மேல நாகூர் தர்கா. இந்த தர்காவின் கந்தூரி விழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புத் தொழுகையும், அதைத் தொடர்ந்து கந்தூரி விழா கொடியேற்றமும் நடைபெற்றன. பின்னர் பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இரவு சுமார் 7.30 மணி அளவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. நாகை, நாகூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்க்கு அழைப்பு! கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!!

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பெட்ரோல், டீசல் நிரப்ப படையெடுத்த வாகன ஓட்டிகள் - புகைப்படங்கள்

‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
