11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

2-ஆவது நாளாக "ஆபரேஷன் ஆம்லா' ஒத்திகை

கடலோரக் காவல்படை சார்பில், நாகை மாவட்டத்தில் "ஆபரேஷன் ஆம்லா' எனப் பெயரிடப்பட்டுள்ள தீவிரவாத

Updated On :24 ஜனவரி 2019, 2:57 am IST

கடலோரக் காவல்படை சார்பில், நாகை மாவட்டத்தில் "ஆபரேஷன் ஆம்லா' எனப் பெயரிடப்பட்டுள்ள தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி 2-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. 
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கடலோரக் காவல் படையினர், கடற்படை மற்றும் காவல்துறையினருடன் இணைந்து ஆண்டுதோறும், தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாகை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், கடல்மார்க்கமாக வந்து, நாகையை அடுத்த நாகூரில் உள்ள சி.பி.சி.எல். ஆயில் ஜெட்டி மற்றும் வேளாங்கண்ணியில் ஒரு தங்கும் விடுதி ஆகியவற்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 7 கமாண்டோ படை வீரர்களை கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமையும் ஆபரேஷன் ஆம்லா தீவிரவாத  ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாகை மாவட்ட கடற்கரையோரங்களிலும், கடல் பரப்பிலும் கடலோரக் காவல்படை மற்றும் மாவட்ட போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.