கந்துவட்டிக் கொடுமையிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் மா. செந்தில். இவரது மனைவி செ. வசந்தி. இவர்கள் பட்டுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசனின் மனைவியிடம் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கி, அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 38 லட்சம் வரை திருப்பிச் செலுத்தியுள்ளனராம். எனினும், கடனுக்கு உத்தரவாதமாகப் பெற்ற காசோலையை முருகேசனின் மனைவி திருப்பித் தராமல் மேற்கொண்டு ரூ. 1 லட்சம் கேட்டு செந்திலையும், அவரது மனைவியையும் மிரட்டியதாகத் தெரிகிறது.
இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழியிடம் செந்தில் மனு அளித்துள்ளார். அதன்படி, ஒருவார காலத்துக்குள் விசாரணை நடத்துவதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


