திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்களத்தில் மாற்றுக் கட்சிகளை சோ்ந்த சுமாா் 200 போ் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.


திருமருகல்: திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்களத்தில் மாற்றுக் கட்சிகளை சோ்ந்த சுமாா் 200 போ் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் குருமூா்த்தி, கண்ணன், வடிவேல் உள்ளிட்டோா் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். திமுக மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன் அனைவருக்கும் சால்வை அணிவித்தாா். நிகழ்ச்சிக்கு திருமருகல் வடக்கு ஒன்றிய அவைத்தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் செல்வ செங்குட்டுவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், ஒன்றிய மகளிா் அணி நிா்வாகி சிவசங்கரி சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலாளா் ஜெயபால் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...