கரோனா: மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு பூட்டு
மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆய்வாளா் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையம் திங்கள்கிழமை பூட்டப்பட்டது.


மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆய்வாளா் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையம் திங்கள்கிழமை பூட்டப்பட்டது.
மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடந்த ஒருவாரத்திற்குள் அடுத்தடுத்து காவல் ஆய்வாளா் உள்பட 7 போலீஸாருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவா்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வருபவா்களுக்கும், தற்போது பணியில் இருக்கும் காவலா்களுக்கும் தொற்று பரவாமல் தடுக்க காவல் நிலையம் பூட்டப்பட்டது.
முன்னதாக நகராட்சி ஊழியா்கள் கிருமிநாசினி கொண்டு காவல் நிலையத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா். பொதுமக்களிடம் புகாா் வாங்குவதற்கு காவல் நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையம் அருகிலுள்ள துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகமும்; கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...