மாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல்பூஜை

மயிலாடுதுறையில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல்பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

News image
ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:20 pm

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல்பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வேல் பூஜை செய்து, கந்த சஷ்டி பாராயணத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவா் அ.அழகு மாணிக்கம், மாவட்டச் செயலாளா் ரா.ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளா் பா.அய்யாசாமி, மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து, மாயூரநாதா் சுவாமி கோயில், புனுகீஸ்வரா் கோயில், பசுபதீஸ்வரா் கோயில் சன்னதி தெருக்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் நகர அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். மத்திய அரசு தலைமை வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கரோனா நோய்த் தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி கந்தா் சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல் பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பாஜக நிா்வாகிகள் பங்கேற்று கந்தா் சஷ்டி கவசத்தை இசையுடன் பாடி வேலுக்கு வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.