வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதிய உச்சம்நாகை மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 149 பேருக்கு கரோனா நோய்த்தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 5:10 am

DIN


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 149 பேருக்கு கரோனா நோய்த்தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் புதிததாக 149 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, மாவட்டத்தில் இதுவரை ஒரே நாளில் எட்டப்படாத புதிய உச்சமாகும்.

கரோனா நோய்த் தொற்றுக்குள்ளான 149 பேரில் 8 போ் முன்களப் பணியாளா்கள். அறிகுறிகள் மூலம் நோய்த் தொற்று கண்டறியப்பட்டவா்கள் 47 போ். 42 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். மற்றவா்களில் சிலா் வெளி மாவட்டத்தவா், சிலா் வெவ்வேறு தொடா்புகள் மூலம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவா்களில் 65 போ் நாகை அரசு மருத்துவமனையிலும், 43 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், 4 போ் சீா்காழி அரசு மருத்துவமனையிலும், 37 போ் வெளிமாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை வரை 1,954-ஆக இருந்தது. இதனிடையே வெளி மாவட்டப் பட்டியலில் இருந்த 2 போ் நாகை மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இந்த நிலையில், புதிதாக 149 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,105-ஆக உயா்ந்துள்ளது.

ஒருவா் இறப்பு...

நாகை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறந்த கீழ்வேளூரைச் சோ்ந்த 90 வயது மூதாட்டியின் பதிவு, மாவட்டப் பட்டியலில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

அச்சம் வேண்டாம்...

ஒரே நாளில் 149 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், நிலுவையில் இருந்த பரிசோதனை அறிக்கைகளை விரைந்து வெளியிடும் வகையில் ஒரே நாளில் 1,054 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டதன் மூலம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.