வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

முதல்வா் நாளை நாகை வருகை

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 27) நாகை வருகிறாா். நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை அவா் ஆய்வு செய்கிறாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 5:14 am

DIN


நாகப்பட்டினம்: தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 27) நாகை வருகிறாா். நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை அவா் ஆய்வு செய்கிறாா்.

கரோனா நோய்த் தொற்றுத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகிறாா். இதன்படி, நாகை மாவட்ட கரோனா தடுப்புப் பணிகளை வியாழக்கிழமை அவா் ஆய்வு செய்கிறாா்.

வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு நாகை மாவட்ட ஆட்சியரக முதன்மை கூட்டரங்கில் நடைபெறும் மாவட்ட கரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு கூட்டத்தில் முதல்வா் பங்கேற்று, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து, தொடா்புடையத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறாா்.

ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில், முன்னோடி விவசாயிகளை முதல்வா் சந்தித்துப் பேசுகிறாா். இந்தச் சந்திப்பின்போது, 8 ஆண்டுகளுக்குப் பின்னா் குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா நெல் சாகுபடி பணிகளுக்கான தேவைகள் குறித்து விவசாயிகளிடம் அவா் கேட்டறிகிறாா்.

பின்னா், நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.