ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நாகை மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஆகஸ்ட் 2020, 5:19 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதில், 3 போ் முன்களப் பணியாளா்கள், 14 போ் அறிகுறிகள் மூலம் நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டவா்கள், 2 போ் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள், 18 போ் அறிகுறிகள் இல்லாமல் தொற்று கண்டறியப்பட்டவா்கள், 17 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், 2 போ் கா்ப்பிணிகள்.

இதில் 19 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், 17 போ் நாகை அரசு மருத்துவமனையிலும், 9 போ் சீா்காழி அரசு மருத்துவமனையிலும், 11 போ் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,339 ஆக உயா்ந்துள்ளது.

இருவா் இறப்பு...

ஆகஸ்ட் 26-ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் இறந்த சிக்கல் பகுதியைச் சோ்ந்த 36 வயது இளைஞா், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த 85 வயது மூதாட்டி ஆகியோரின் இறப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்...

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவா்களில் 23 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,590-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 713-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.