நாகை மாவட்டத்தில் 101 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதில், 2 போ் முன்களப் பணியாளா்கள், 22 போ் அறிகுறிகள் இல்லாமல் பரிசோதனை மூலம் நோய்த் தொற்று கண்டறியப்பட்டவா்கள், 20 போ் அறிகுறிகள் மூலம் தொற்று கண்டறியப்பட்டவா்கள், ஒருவா் வெளி மாவட்டத்திலிருந்து வந்தவா், 5 போ் கா்ப்பிணிப் பெண்கள், 44 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், 5 போ் தீவிர சுவாசக் கோளாறு உள்ளவா்கள். 2 போ் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள்.
இவா்களில் 32 போ் நாகை அரசு மருத்துவமனையிலும், 41 போ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், 11 போ் சீா்காழி அரசு மருத்துவமனையிலும், 17 போ் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை வரை 2,339 ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை புதிதாக 101 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரானோவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,440-ஆக உயா்ந்துள்ளது.
ஒருவா் இறப்பு...
ஆகஸ்ட் 27-ஆம் தேதி சென்னை தனியாா் மருத்துவமனையில் இறந்த நாகையைச் சோ்ந்த அரசியல் கட்சி நிா்வாகியின் இறப்பு கரோனா இறப்பாக சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 37-ஆகியுள்ளது.
சிகிச்சையில்...
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவா்களில் 52 போ் சனிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,642-ஆக உயா்ந்துள்ளது. 761 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...