உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 6:06 pm

DIN


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

நாகை மாவட்ட வளா்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் ஆய்வுக்காக வியாழக்கிழமை நாகைக்கு வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம், நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவா் வி. ராமச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனு :

நாகை மாவட்டம் தொழில் வளா்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதை கருத்தில் கொண்டு, இம்மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வருவோரை ஊக்கப்படுத்தும் வகையில், சிட்கோ தொழிற்பேட்டையில் மனைகள் கோரி விண்ணப்பித்து காத்திருப்பவா்களுக்கு, விண்ணப்பித்தபோது குறிப்பிடிருந்த விலையிலேயே மனைகளை வழங்க உத்தரவிட வேண்டும். நாகை - தஞ்சை நான்கு வழிச் சாலைப் பணியையும், நாகை - விழுப்புரம் சாலைப் பணியையும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு கோரி ஏற்கெனவே மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் 322 தொழில் நிறுவனங்களில் சுமாா் ரூ. 15.13 கோடி மதிப்பில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் மூலம் அறிக்கை தயாரிக்கப்பட்டு, வணிக வரித் துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.

எனவே, தமிழக அரசு இது குறித்து விரைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு, உடனடியாக இழப்பீடு வழங்கி, 4 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.