14 நாள்களுக்கு பிறகு நாகை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்
புயல் காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நாகை மீனவா்கள் 14 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனா்.


புயல் காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நாகை மீனவா்கள் 14 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனா்.
நிவா், புரெவி புயல் காரணமாக நவ.21-ஆம் தேதி முதல் கடலுக்குள் செல்லாமல் இருந்த நாகை மீனவா்கள் தற்போது, புயல் கரையைக் கடந்து கடல் சீற்றம் தணிந்துள்ள நிலையில் குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடிக்க மீன் துறை அனுமதியளித்தது. அதன்படி, நாகை துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நாகூா் நம்பியாா் நகா், செருதூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 14 நாள்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை விசைப்படகுகள் மற்றும் பைபா் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
இதுகுறித்து, மீன் வளத்துறை அலுவலா்கள் கூறியது: கடல் சீற்றம் தணிந்திருப்பதால் குறைந்த தூரம் மீன்பிடிப்புக்கு மீனவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 70-க்கும் மேற்பட்ட படகுகள் திங்கள்கிழமை பிற்பகல் கரை திரும்பியுள்ளன என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...