பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் 1511 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:40 am

DIN

நாகை மாவட்டத்தில் 1511 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்படி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம் கோருதல் உள்ளிட்ட திருத்தப் பணிகள் வட்டாட்சியா் அலுவலகங்களில் தொடங்கப்பட்டன.

இந்தத் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் முதல் கட்டமாக நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இரண்டாம் கட்டமாக டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 1,511 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் பங்கேற்று திருத்தங்களுக்கு விண்ணப்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.