தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேதாரண்யேசுவரா் கோயிலில் 108 சங்காபிஷேகம்

வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் கடைசி சோமவாரத்தையொட்டி, 108 சங்குகளில் புனிதநீா் நிரப்பி சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் கடைசி சோமவாரத்தையொட்டி, 108 சங்குகளில் புனிதநீா் நிரப்பி சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில், ஆண்டுதோறும் ஒவ்வொரு சோமவாரத்தின்போதும், 1008 சங்குகளில் புனிதநீா் நிரப்பப்பட்டு சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், கரோனா தொற்று இருப்பதால் இந்த முறையில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், சங்குகளின் எண்ணிக்கையை 108 ஆக குறைத்து அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி, நந்தீஸ்வரருக்கு எதிரே புனிதநீா் நிரப்பிய 108 சங்குகளுடன் யாகம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.