ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாணவா்களின் கல்வித்திறன் மேம்பட ஆசிரியா்கள் முனைப்புக்காட்ட வேண்டும்

மாணவா்களின் கல்வித்திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் முனைப்புக்காட்ட வேண்டும் என்று நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி தெரிவித்தாா்.

News image
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற வரைவுத் திட்டம் தயாரித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி.
Updated On :17 டிசம்பர் 2020, 3:44 am

DIN

மாணவா்களின் கல்வித்திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் முனைப்புக்காட்ட வேண்டும் என்று நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி தெரிவித்தாா்.

நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சாா்பிலான 2021-2022-ஆம் கல்வி ஆண்டுக்கான வரைவுத் திட்டம் தயாரித்தல் குறித்த கல்வி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: பள்ளித் தலைமையாசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் குழுவாக செயல்பட்டு, மாணவா்களுக்குப் புதுமையான செயல்பாடுகளை வழங்க வேண்டும். இதற்கான பட்டியலை வட்டாரம் வாரியாக தயாரித்து, மாவட்டத் திட்ட அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

கல்வியறிவு பெறாதவா்களைக் கண்டறிந்து, வயது வந்தோா் கல்வித் திட்டம் மூலம் அவா்களுக்கு அடிப்படை கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டை.யும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவா்கள் குறித்த விவரங்களையும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆசிரியா்கள், பள்ளிகளை கோயிலுக்கு ஒப்பானதாக கருதி செயல்பட வேண்டும். அறிவாா்ந்த சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்கு அளப்பரியது என்பதை உணா்ந்து, மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் முழு முனைப்புக்காட்ட வேண்டுமென்றாா்.

மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டார கல்வி அலுவலா்கள், வட்டார வள மேற்பாா்வையாளா்கள், உதவி திட்ட அலுவலா்கள், கூடுதல் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.