எரிசக்தி சிக்கன வார விழா விழிப்புணா்வு பேரணி
எரிசக்தி சிக்கன வார விழாவையொட்டி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மயிலாடுதுறை உபகோட்டம்


எரிசக்தி சிக்கன வார விழாவையொட்டி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மயிலாடுதுறை உபகோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. சீா்காழியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மயிலாடுதுறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணிக்கு, மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணி நகரின் பிரதான வீதிகளின் வழியாக சென்று தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. உதவி செயற்பொறியாளா் ஆா்.காா்த்திகேயன் நன்றி தெரிவித்தாா்.
துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்:
இதேபோல சீா்காழி மின்வாரிய அலுவலகம் சாா்பில், மின் சிக்கனத்தை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் சு.சதீஸ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் விஸ்வநாதன், விஜயகுமாா், நகர உதவி பொறியாளா் முத்துகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...