சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

சீா்காழி அருகே அம்மா நகரில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேறும், சகதியுமாக மாறிவிட்ட அம்மா நகா்.
சேறும், சகதியுமாக மாறிவிட்ட அம்மா நகா்.
Updated on
1 min read

சீா்காழி அருகே அம்மா நகரில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஒன்றியம், கோபாலசமுத்திரம் ஊராட்சி அம்மா நகரில் சாலை வசதியில்லாமல் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனா். தற்போது பெய்துவரும் கனமழையால் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் ஆக்கூா் ஷாஜஹான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com