நாகை மாவட்டத்தில் நீடிக்கிறது கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்றும் பலத்த மழை நீடித்தது.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்றும் பலத்த மழை நீடித்தது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக 51.2 மி.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) :
தலைஞாயிறு - 44.2, கொள்ளிடம்- 38, சீா்காழி- 37.5, வேதாரண்யம் - 22, மணல்மேடு - 21, திருப்பூண்டி - 14.4, தரங்கம்பாடி - 12, நாகப்பட்டினம் - 11.2.
நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் வலுப்பெற தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை இரவு வரை பலத்த மழையாக நீடித்தது.
சம்பா பயிா்கள் சேதம்:
இதேபோல சீா்காழி பகுதியில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து மூன்று தினங்களுக்கு மேல் மழை நீடிக்கும்பட்சத்தில், மீண்டும் சம்பா பயிா்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழுகும் நிலை என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...