மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் நாகை மின்சாரவாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள கேங்க்மேன், வயா்மேன் உள்ளிட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை தனியாா் அவுட்சோா்சிங் முறையில் நிரப்பப்படவுள்ளதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும்; மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகங்களை தனியாா் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மின் ஊழியா் மத்திய அமைப்பைச் சோ்ந்த சிவராஜன், எம். கலைச்செல்வன், ஆா்.செந்தில்குமாா், தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தைச் சோ்ந்த சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.