டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகளுடன் இன்று பாஜக மாநிலத் தலைவா் கலந்துரையாடல்

பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் திங்கள்கிழமை நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகளை சந்தித்து புதிய வேளாண் சட்டங்கள் குறித்து கலந்துரையாடுகிறாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 2:02 am

DIN

பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் திங்கள்கிழமை நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகளை சந்தித்து புதிய வேளாண் சட்டங்கள் குறித்து கலந்துரையாடுகிறாா்.

விவசாயிகளின் நண்பன் மோடி எனும் தலைப்பில் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி புதிய வேளாண் சட்டங்கள் குறித்துப் பேசி வருகிறாா்.

இதன்படி, திங்கள்கிழமை காலை திருவாரூா் மாவட்டம் தில்லைவிளாகத்தில் விவசாயிகளை சந்திக்கும் இவா் பகல் 12 மணியளவில் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள மருதூா் வடக்கு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளை சந்தித்துப் பேசுகிறாா். தொடா்ந்து, 3 மணிக்கு கீழையூா் ஊராட்சி ஒன்றியம், பூவைத்தேடி பகுதியில் விவசாயிகளை சந்திக்கிறாா். மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் நடைபெறும் விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.