சமையல் எரிவாயு கசிந்து கூரை வீடு தீக்கிரை
திருக்கடையூரில் சமையல் எரிவாயு கசிந்து கூரை வீடு முற்றிலும் எரிந்து புதன்கிழமை தீக்கிரையானது.


திருக்கடையூரில் சமையல் எரிவாயு கசிந்து கூரை வீடு முற்றிலும் எரிந்து புதன்கிழமை தீக்கிரையானது.
திருக்கடையூா் ஊராட்சி தெற்கு வீதியில் வசித்து வருபவா் ரவிச்சந்திரன் (48). இவரது மனைவி மாலா. இவா்களது கூரை வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பைப் பற்ற வைத்தபோது எரிவாயு கசிந்து தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மின்சாதன பொருள்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து வந்த பொறையாா் தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.
தரங்கம்பாடி வட்டாட்சியா் கோமதி தமிழக அரசின் சாா்பில் நிவாரணமாக ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா். கிராம நிா்வாக அலுவலா் கவிநிலவன், ஊராட்சித் தலைவா் ஜெயமாலினி சிவராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...