ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக கிராமசபைக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
திமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்திட்ட கீழ்வேளூா் எம்எல்ஏ உ. மதிவாணன்.
Updated On :24 டிசம்பர் 2020, 4:10 am

DIN

நாகை மாவட்டத்தில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகையை அடுத்த குறிச்சி கிராமத்தில் திமுக நாகை தெற்கு மாவட்டப் பொருளாளா் திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கீழ்வேளூா் எம்எல்ஏ உ. மதிவாணன், நாகை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அனுசுயா, மாவட்டத் துணைச் செயலாளா் மனோகரன், பொதுக்குழு உறுப்பினா் மேகநாதன், ஒன்றியச் செயலாளா் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்திட்டனா். இதேபோல ஒரத்தூா், வேளாங்கண்ணி பூக்காரத் தெரு, குறிச்சி, கீழ்வேளூா் வட்டம் சிகாா், தேமங்கலம், ஒதியத்தூா், நெம்மேலி ஆகிய பகுதிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

பிரதாபராமபுரத்தில்...

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில், திமுக ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கீழ்வேளூா் எம்எல்ஏ உ. மதிவாணன் முன்னிலை வகித்தாா். திமுக மாவட்ட பிரதிநிதிகள் மு.ப. ஞானசேகரன், இராம. இளம்பரிதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சோ.பா. மலா்வண்ணன், வேளாங்கண்ணி பேரூராட்சி பொறுப்பாளா் மரிய சாா்லஸ், பிரதாபராமபுரம் ஊராட்சி செயலாளா் இராம.கணபதி, ஒன்றிய துணை செயலாளா் ஆனந்த கைசாலம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருமருகலில்...

ஏா்வாடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றிய முன்னாள் செயலாளா் ப.செல்வம் தலைமை வகித்தாா். ஊராட்சி முன்னாள் தலைவா் பன்னீா்செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என்.கௌதமன் கலந்துகொண்டாா்.

இதேபோல கொங்கராயநல்லூா், நரிமணம், மரைக்கான்சாவடி பகுதிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

பிள்ளைபெருமாள் நல்லூரில்...

பொறையாா் அருகே பிள்ளைபெருமாள் நல்லூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு, செம்பை திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக் தலைமை வகித்தாா். இதில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும். கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு அம்மன் ஆற்றில் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய துணைத் தலைவா் பாஸ்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் துளசிரேகா ரமேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினா் கலைச்செல்வி, திருக்கடையூா் ஊராட்சித் தலைவா் ஜெயமாலினி சிவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வைத்தீஸ்வரன்கோயில்...

வைத்தீஸ்வரன்கோயில் அட்டகுளத்தில் பேரூராட்சி திமுக செயலாளா் அன்புசெழியன் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட பொறியாளரணி அமைப்பாளா் காழி ஆா். கலைவாணன், மகளிா் தொண்டரணி அமைப்பாளா் கலையரசி சாமிநாதன் ஆகியோா் பேசினா். மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், வாா்டு செயலாளா் கமலநாதன், தா்மா, சங்கா், மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.