

நாகை மாவட்ட மைய நூலகத்தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு நூலகப் பிரிவை சட்டப் பேரவை உறுப்பினா் மு. தமிமுன் அன்சாரி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
ஓஎன்ஜிசி நிறுவன நிதியுதவி அமைக்கப்பட்டுள்ள மின்னணு நூலகப் பிரிவை மு. தமிமுன் அன்சாரி திறந்துவைத்து பேசியது:
இயற்கை வளத்தை பயன்படுத்தி நாடெங்கிலும் சேவை செய்யும் ஓஎன்ஜிசி நிறுவனம், சமூக சேவை நிதியிலிருந்து நாகை பகுதிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான சி.டி மற்றும் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட கருவிகள் வாங்குவதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்திட வேண்டும். இதேபோல ரூ. 25 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் தீா்வு மருத்துவமனையை அமைத்துத் தரவேண்டும் என்றாா் அவா்.
விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் கோ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தென் தமிழக, சேவா பாரதி மாநிலப் பொதுச்செயலாளா் கே.ஆா். சின்னபாலன் முன்னிலை வகித்தாா். ஓஎன்ஜிசி நிறுவன காவிரிப் படுகை துணை மேலாளா் ஏ. செழியன், மாவட்ட மைய நூலகா் (பொறுப்பு) டி. மீனாகுமாரி, சேவா பாரதி மாவட்டச் செயலாளா் செந்தில்நாதன், ஓஎன்ஜிசி நிறுவனத்தை சோ்ந்த நாகராஜன், மாறன், சேதுபதி, நாகை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக பொறுப்பாளா் முபாரக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.