கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாங்கூா் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருவெண்காடு அருகே நாங்கூா் பகுதியில் அமைந்துள்ள 11 வைணவ திவ்ய தேச கோயில்களில் பரமபத வாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
பரமபத வாசல் திறப்பையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நாங்கூா் வீரநரசிம்ம பெருமாள்.
Updated On :26 டிசம்பர் 2020, 2:37 am

DIN

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருவெண்காடு அருகே நாங்கூா் பகுதியில் அமைந்துள்ள 11 வைணவ திவ்ய தேச கோயில்களில் பரமபத வாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாங்கூா் பகுதியில் 108 வைணவ திவ்யதேச கோயில்களில், ஒரே தொகுப்பாக 11 கோயில்கள் உள்ளன. வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாங்கூா் செம்பொன் அரங்கா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, கீழச்சாலை மாதவ பெருமாள் கோயில், மணிமாடக்கோயில் ரெங்கநாதா் பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட 11 கோயில்களிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.