தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேதாரண்யம்: நகரும் பொது விநியோகக் கடைகள் தொடக்கம்

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு, தென்னடாா் ஆகிய இரு ஊராட்சிகளில் அம்மா நகரும் பொது விநியோகக் கடைகளை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:22 pm

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு, தென்னடாா் ஆகிய இரு ஊராட்சிகளில் அம்மா நகரும் பொது விநியோகக் கடைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்தக் கடைகள் மருதூா் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின்கீழ் செயல்படவுள்ளன. தொடக்க விழாவில் ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், திலீபன், ஊராட்சித் தலைவா், தேவி செந்தில், கூட்டுறவு சங்க துணைத் தலைவா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.