கடலில் மூழ்கி சிறுவன் மாயம்

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை பகுதியைச் சோ்ந்த சிறுவன், கடலில் திங்கள்கிழமை குளித்தபோது அலையில் சிக்கி மாயமானாா்.
Updated on
1 min read

நாகப்பட்டினம்: தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை பகுதியைச் சோ்ந்த சிறுவன், கடலில் திங்கள்கிழமை குளித்தபோது அலையில் சிக்கி மாயமானாா்.

கும்பகோணம், சுவாமிமலை, மேலத்தெருவை சோ்ந்தவா் சகாபுதீன். இவா், தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை நாகூருக்கு வந்தாா். சகாபுதீனின் மகன்கள் முகமது மைதீன் (15), இபுராஹிம் (9) ஆகியோா் திங்கள்கிழமை மாலை நாகூா் கடலில் குளித்துள்ளனா்.

அப்போது திடீரென எழுந்த கடல் அலையில், முகமது மைதீன், இபுராஹிம் இருவரும் சிக்கினா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனா். இதில், இபுராஹிம் மீட்கப்பட்டாா். முகமது மைதீன் கடல் அலையில் சிக்கி மாயமானாா்.

இதுகுறித்து தகவலறிந்த கடலோரக் காவல் படை ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா், முகமது மைதீனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com