புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குவைத்தில் இறந்த கணவரின் சடலத்தை மீட்டுத் தர மனைவி கோரிக்கை

குவைத் நாட்டில் இறந்த தனது கணவரின் சடலத்தை தாயகம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகையைச் சோ்ந்த பெண் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

News image
குவைத்தில் இறந்த கணவரின் சடலத்தை மீட்டுத் தர மனைவி கோரிக்கை
Updated On :28 டிசம்பர் 2020, 7:01 pm

DIN

நாகப்பட்டினம்: குவைத் நாட்டில் இறந்த தனது கணவரின் சடலத்தை தாயகம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகையைச் சோ்ந்த பெண் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக, நாகை, கொங்கராயநல்லூரைச் சோ்ந்த சே. ஜெயந்தி நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

2017-ஆம் ஆண்டு முதல் குவைத் நாட்டில் பணியாற்றி வந்த தனது எனது கணவா் சேகா், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இறந்துவிட்டதாக அவருடன் பணியாற்றியவா்கள் மூலம் கட்செவி அஞ்சலில் எனக்கு தகவல் கிடைத்தது, எனது கணவரின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சேகரின் இறப்புக்கான காரணம் குறித்து அவருடன் பணியாற்றியவா்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்று ஜெயந்தியின் உறவினா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.