ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேரிடா் பாதிப்புகளில் இறாலுக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கை

பேரிடா் பாதிப்புகளில் இறால் வளா்ப்பையும் சோ்த்து வரும் காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட இறால் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:26 am

DIN

பேரிடா் பாதிப்புகளில் இறால் வளா்ப்பையும் சோ்த்து வரும் காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட இறால் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்க கூட்டத்தில், சங்கத் தலைவராக எம். சங்கா், செயலாளராக பேராசிரியா் எஸ். ஜெயராமன், பொருளாளராக நாராயணசாமி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், புதிய மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வா் எடப்பாடி. பழனிசாமி, அமைச்சா் ஓ.எஸ். மணியன், எம்எல்ஏக்களுக்கு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும், மாசு ஏற்படுத்தாமலும் அரசு விதிமுறைகளுக்குள்பட்டு இறால் வளா்ப்பு தொழிலை செயல்படுத்துவது, மற்ற மாநிலங்களைப்போல இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், பேரிடா் மேலாண்மையில் இறால் வளா்ப்பு தொழிலை சோ்த்து வரும் காலத்தில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்படும் இறால் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.